/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இ--பாஸ் இன்னும் இருக்கா? ஊட்டிக்கு வரும் வாகன ஓட்டிகள் கேள்வி; சோதனைச்சாவடி ஊழியர்களிடம் தகராறு
/
இ--பாஸ் இன்னும் இருக்கா? ஊட்டிக்கு வரும் வாகன ஓட்டிகள் கேள்வி; சோதனைச்சாவடி ஊழியர்களிடம் தகராறு
இ--பாஸ் இன்னும் இருக்கா? ஊட்டிக்கு வரும் வாகன ஓட்டிகள் கேள்வி; சோதனைச்சாவடி ஊழியர்களிடம் தகராறு
இ--பாஸ் இன்னும் இருக்கா? ஊட்டிக்கு வரும் வாகன ஓட்டிகள் கேள்வி; சோதனைச்சாவடி ஊழியர்களிடம் தகராறு
ADDED : ஜூன் 17, 2025 09:26 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனைச்சாவடி வழியாக வரும் வாகன ஓட்டிகள், 'இ--பாஸ், இன்னும் இருக்கா' என கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் படி இ--பாஸ் அமலில் உள்ளது. இதையடுத்து, கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில் மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் மற்றும் கோத்தகிரி சாலை குஞ்சபனை அருகே இ--பாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுற்றுலா வாகனங்கள் இ--பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இ-ல்லையென்றால் இ--பாஸ் எடுத்த பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர். இதனிடையே கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இ--பாஸ் பெற்று பல லட்சம் வாகனங்கள் நீலகிரி மாவட்டம் சென்றன. தற்போது ஊட்டி சீசன் முடிந்த நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள், கல்லாறு சோதனை சாவடியில் உள்ள ஊழியர்களிடம் 'இ--பாஸ் இன்னும் இருக்கா? சீசனே முடிந்த பின்னர் இ-பாஸ் எதற்காக எடுக்க வேண்டும், அப்படி இருந்தால் அதற்கான ஜி.ஓ., காண்பிக்கவும்' என கூறி சோதனைச் சாவடி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வருவாய் துறையினர் கூறுகையில், ' இ-பாஸ் எத்தனை மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' அமைக்கப்பட்டு, வாகனங்கள் தானியங்கி முறையில் சோதனை செய்யப்பட்டு, இ--பாஸ் பெற்றிருந்தால் அனுமதிக்கப்படுகின்றன. இ--பாஸ் இல்லை என்றால் 'பூம் பேரியர்' வாகனங்களை அனுமதிப்பதில்லை. இதனால் கோபம் அடையும் சுற்றுலா பயணிகள் எங்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர்.
நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ--பாஸ் தேவையில்லை. இதனால் அவ்வாகனங்கள், அரசு பஸ்களை சோதனை செய்வது கிடையாது. ஆனால் பிற மாவட்ட, மாநில வாகனங்களுக்கு இ--பாஸ் தேவை. அந்த வாகனங்களை சோதனை செய்யும் போது, முன்னால் சென்ற நீலகிரி வாகனத்தை சோதனை செய்வது கிடையாது, எங்கள் வாகனத்தை மட்டும் ஏன் சோதனை செய்கிறீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இ--பாஸ் குறித்த விழிப்புணர்வை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.
சேதமடைந்த சாலையால் அவதி
கல்லாறு சோதனை சாவடியில் நீலகிரியில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. லாரிகள், பஸ்கள் செல்லும் போது சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கீழே கவிந்து விடும் அபாயமும் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றனர். இச்சாலையை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-