/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையம் சீசனுக்குள் திறக்கப்படுமா? நீலகிரி மலை ரத அமைப்பினர் எதிர்பார்ப்பு
/
மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையம் சீசனுக்குள் திறக்கப்படுமா? நீலகிரி மலை ரத அமைப்பினர் எதிர்பார்ப்பு
மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையம் சீசனுக்குள் திறக்கப்படுமா? நீலகிரி மலை ரத அமைப்பினர் எதிர்பார்ப்பு
மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையம் சீசனுக்குள் திறக்கப்படுமா? நீலகிரி மலை ரத அமைப்பினர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 23, 2025 10:46 PM

குன்னுார்: 'குன்னுார் அருகே உள்ள, ரன்னிமேடு ரயில் நிலையத்தை கோடை சீசனுக்குள் திறக்க வேண்டும்,' என, நீலகிரி மலை ரத அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
குன்னுார் - ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மலை ரயிலுக்கு, 2005ல் 'யுனெஸ்கோ' அங்கீகாரம் வழங்கியது. இதன்பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆரம்ப காலத்தில், மலை ரயிலுக்கு நிலக்கரியால் இயங்கும், 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. அதில், இயங்கும் நிலையில் உள்ள ஒரே இன்ஜின் தற்போது மேட்டுப்பாளையத்தில் பராமரிப்பின்றி போடப்பட்டுள்ளது.
இன்ஜினை பராமரித்து இயக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனை இயக்கினால் உலகளவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவர். அதேபோல, உள்ளூர் மக்களும்; மாணவ, மாணவியரும் அதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர்.
மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையம்
ஊட்டியில், 26.6 கி.மீ., தொலைவில் உள்ள, குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையத்தை சுற்றிலும் அழகிய மலைப்பகுதிகள் காணப்படுகின்றன. காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்ட நதியும் இங்கு உள்ளது.
மேலும், தோட்டக்கலைதுறையின் காட்டேரி பூங்காவும், இதே இடத்தில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வந்து செல்ல மிகவும் சிறந்த இடமாக உள்ளது. இத்தகைய ரயில் நிலையம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. 'இதனை வரும் கோடை சீசனுக்குள் திறக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன்; உறுப்பினர்கள் கூறியதாவது: ரன்னிமேடு ரயில் நிலையத்தை மூடியது, மலை ரயில் ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இங்கு கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சீசனுக்குள் ரயில் நிலையத்தை திறப்பதுடன், கழிப்பிடங்களையும் திறக்க வேண்டும்.
இங்குள்ள குடியிருப்புகளை பராமரித்து, ரயில்வே செயல் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், நீலகிரி மக்களின், 20 ஆண்டுகால கோரிக்கையான ரன்னிமேடு நிலையத்தை 'ஹால்ட்' நிலையமாக மாற்ற வேண்டும்.
'ரேக்' பிரிவு கொண்ட நீலகிரி மலை ரயிலை தொடர்ந்து பாதுகாக்க, 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின் இயங்கும் வகையில், நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு தீர்வு காண வலியுறுத்தில், மலை ரயில் ஆர்வலர்கள் சார்பில், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. அவரும் முழு விபரங்களை கேட்டு, இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்

