/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாலுகா தலைநகரை கவனிக்குமா போக்குவரத்து துறை
/
தாலுகா தலைநகரை கவனிக்குமா போக்குவரத்து துறை
ADDED : ஏப் 18, 2025 11:53 PM
பந்தலுார்: 'பந்தலுாரில் இருந்து நாள்தோறும் அரசு பஸ் இயக்க வேண்டும்,' என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
பந்தலுாரில் தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம், நகராட்சி, கருவூலம், வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
நகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பந்தலுாரில் இரவில் பஸ்சை நிறுத்தி அதிகாலையில் சமவெளி பகுதிகளுக்கு இயக்கவும், மதியத்திலும் பந்தலுாரியில் இருந்து பஸ்களை இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, பந்தலுார் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், காலை, 9-:30 மணிக்கு சேலம், மாலை, 3:-30 மணிக்கு ஈரோடு ஆகிய பஸ்கள் மட்டுமே, கூடலுாரில் இருந்து பந்தலுார் வந்து திரும்பி செல்கின்றன.
அதிலும், சேலம் பஸ் கூடலுாரில் இருந்து முன்பதிவு செய்வதால், பந்தலுாரில் இருந்து செல்லும் பயணிகளுக்கு பயன் இல்லாத நிலை தொடர்கிறது. ஈரோடு பஸ் பெரும்பாலான நாட்களில் பந்தலுார் வருவதில்லை.
வெளியூர்களிலிருந்து பந்தலுார் வழியாக பஸ்கள் இயக்கப்படும் நிலையில், ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை பகுதிகளுக்கு, பந்தலுார் பயணிகள் நின்றபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது. ஆனால், ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக , கட்சி நிர்வாகிகள் கூறும் வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
பந்தலுார் மக்கள் கூறுகையில்,'பந்தலுார் பகுதி பயணிகளுக்கு ஏதுவாக இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கவும், உள்ளூர் பகுதிகளுக்கு சுற்று பஸ் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.