/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுயதொழில் கற்று கொண்டால் பெண்கள் அச்சமின்றி வாழலாம்
/
சுயதொழில் கற்று கொண்டால் பெண்கள் அச்சமின்றி வாழலாம்
சுயதொழில் கற்று கொண்டால் பெண்கள் அச்சமின்றி வாழலாம்
சுயதொழில் கற்று கொண்டால் பெண்கள் அச்சமின்றி வாழலாம்
ADDED : ஜூலை 04, 2025 09:35 PM

பந்தலுார்; 'பெண்கள் சுய தொழில் கற்று கொள்வதன் மூலம், எதிர்கால பயம் இன்றி வாழ முடியும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் செயல்படும், 'ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில் இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்பட்டு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தையல் பயிற்சி ஆசிரியர் சுலோச்சனா வரவேற்றார். டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் விஜயன் சாமுவேல் பேசுகையில், ''கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், சிரமப்படக்கூடாது என்பதற்காக கடந்த, 17 ஆண்டுகளாக இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பெண்கள் சுய தொழில் கற்றுக் கொள்வதுடன், தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தையும் பாதுகாப்பதில் முக்கியத்துவம் காட்ட வேண்டும்,'' என்றார்.
கூடலுார் அரசு கல்லுாரி துணை பேராசிரியர் மகேஸ்வரன் சான்றிதழ் வழங்கி பேசுகையில், ''இதுபோன்ற சுய தொழில்கள் கற்று கொள்வதுடன், தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், அதற்கேற்ற குடும்ப சூழலை உருவாக்கவும் வேண்டும்,'' என்றார்.
கல்லுாரி பேராசிரியர் முனைவர் அமுதேஸ்வரன் பேசுகையில், ''பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டாலும், தற்போதும் பல்வேறு பிரச்னைகளால் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற நிலை மாற, சுயமாக சம்பாதிப்பது மற்றும் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்,''என்றார்.
தொடர்ந்து, அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் சமது, தையல் பயிற்சி மாணவிகள் பங்கேற்றனர்.