/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சள் சோள தட்டு வெட்டும் பணி தீவிரம்
/
மஞ்சள் சோள தட்டு வெட்டும் பணி தீவிரம்
ADDED : பிப் 16, 2024 12:13 AM
சூலூர்;சூலூர் வட்டாரத்தில் மஞ்சள் சோள தட்டு வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
சூலூர் வட்டாரத்தில் மானாவாரி நிலங்கள் பல ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. இந்த நிலங்களில் பெரும்பாலும் மஞ்சள் சோளம் மட்டுமே பயிரிடப்படும். கடந்த முறை பருவமழை எதிர்பார்த்த அளவு குறிப்பிட்ட நேரத்தில் பெய்யாததால், விவசாயிகள் காலதாமதமாகத்தான் மஞ்சள் சோளம் விதைத்தனர்.
அதன்பின்னர் ஓரளவு மழை பெய்ததால், மஞ்சள் சோளப்பயிர்கள் கதிர் பிடித்து நன்கு வளர்ந்தன. தற்போது, அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் சோள தட்டுகள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள், அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கால்நடைகளின் தீவனத்துக்கு போக, மீதியுள்ள தட்டுகளை விற்க முடிவு செய்துள்ளோம். எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது, என்றனர்.