/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்த பயிலரங்கம்; கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பங்கேற்பு
/
இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்த பயிலரங்கம்; கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பங்கேற்பு
இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்த பயிலரங்கம்; கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பங்கேற்பு
இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்த பயிலரங்கம்; கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பங்கேற்பு
ADDED : டிச 23, 2024 10:31 PM
ஊட்டி; ஊட்டியில், கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்த பயிலரங்கம் நடந்தது.
சமீபகாலமாக இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த இணைய வழி மோசடிகளால் மக்கள் பல்வேறு வகையில் ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடிகளில் ஏமாறாமல் இருக்க போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கான இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்த பயிலரங்கம், ஊட்டி கூட்டுறவு விருந்தினர் விடுதி அரங்கில் நடந்தது.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் துவக்கி வைத்தார். அதில், 'தொழில் நுட்ப வளர்ச்சியில் இணைய வழியில் நடைபெறும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, படித்தவர்கள், முதியோர் அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகின்றனர். தற்போது, அதிக அளவில் நடைபெறும் இணைய வழி மோசடிகள் குறித்தும் அவற்றை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது,' குறித்து விளக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் சித்ரா பயிலரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பட்டய கணக்காளர் மயில் வாகனம் , தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி முதன்மை தகவல் பாதுகாப்பு அலுவலர் மதிவண்ணன் ஆகியோர் பங்கேற்று, இணைய வழி மோசடிகளை தடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். வங்கியின் பொது மேலாளர் வெற்றி வேலன் உட்பட பலர் பங்கேற்றனர்.