UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:
கூடலுாரில் பொது மக்களுடன் உலக காபி தினம் கொண்டாடப்பட்டது.
கூடலுார் நந்தட்டி செம்பாலா தேயிலை தொழிற்சாலையில், காபி வாரியம், நீலகிரி சிறு காபி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், உலக காபி தின விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை வகித்து, காபி விவசாயம், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு காபி வழங்கி அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொண்டாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் ஷாஜி, நிர்வாகிகள் விசுவநாதன், ஆனந்தராஜ், ஜாய், ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
