பஜார் பகுதியில் குரங்குகள் உலா கூண்டு வைத்து கண்காணிப்பு
பஜார் பகுதியில் குரங்குகள் உலா கூண்டு வைத்து கண்காணிப்பு
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:14 PM

பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதியில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பந்தலுார் பஜார் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் குரங்குகள் முகாமிட்டு, கடைகளுக்குள் புகுந்து பழங்கள் மற்றும் உணவு பொருட்களை பதம் பார்ப்பதுடன், துாக்கி செல்கின்றன. அதேபோல், குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் குரங்குகள், பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், பாதிக்கப்பட்ட வியாபாரிகள், சங்க தலைவர் அஸ்ரப் தலைமையில், தேவாலா வனச்சரகர் அய்யனாரிடம் முறையிட்டனர். தொடர்ந்து, நேற்று காலை,பஜார் பகுதிக்கு குரங்குகள் வரும் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு, பழங்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில்,‘குரங்குகள் கூண்டில் சிக்கியவுடன், அடர்த்தியான வனத்திற்குள் கொண்டு போய் விடப்படும்,’ என்றனர்.
