UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:14 PM

கோத்தகிரி:
கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில், சுற்றுலாப் பயணிகள் வருகை உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான கோடநாடு காட்சி முனை, கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. கோடை சீசன் நாட்கள் உட்பட, சாதாரண நாட்களிலும், பார்வையாளர்களின் கூட்டம் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்களின் வருகை, வெகுவாக குறைந்து இருந்தது. தற்போது, இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை, கணிசமாக அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்க செய்ய ஏதுவாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
