/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக அயோடின் தினம் ஆஷா பணியாளர்களுக்கு பயிற்சி
/
உலக அயோடின் தினம் ஆஷா பணியாளர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 21, 2024 04:40 AM
கூடலுார் : கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில், மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், உலக அயோடின் தினத்தை முன்னிட்டு, ஆஷா பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். முகாமை பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் துவக்கி வைத்தார்.
அதில், 'நியூட்ரிசன் இன்டர்நேஷனல்' உப்பு ஆலோசகர் சரவணன் பேசுகையில்,''அயோடின் கலந்த உப்பு குறித்து தகவல்களை ஆஷா பணியாளர்கள் முழுமையாக அறிந்து கொண்டு கள பணிக்கு செல்ல வேண்டும். வீடுகளில் மக்கள் அயோடின் கலந்த உப்பை பயன் படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கடைகளில், 'அயோடின் இல்லாத உப்பு விற்பனை செய்ய கூடாது,' என, தெரியப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில், கிடைக்கும் அயோடின் கலந்த உப்பை, பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசுகையில்,''அயோடின் கலந்த உப்பு குறித்து கண்காணிப்பு பணியில் ஆஷா பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்,'' என்றார்.