/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 17, 2025 09:17 PM

பந்தலுார்; உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு. பந்தலுாரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்து-----றை; நீலகிரி மாவட்ட குடும்ப நல செயலகம்; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் கதிரவன், தலைமை ஆசிரியர், (பொ) செந்தில் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணி பந்தலுார் பஜார் மற்றும் பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று பள்ளியை சென்றடைந்தது.
தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் குடும்ப நலத்துறை புள்ளியியல் உதவியாளர் சாந்தி தலைமை வகித்து, 'உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு; இளம் வயதில் கர்ப்பம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகள்; போதிய ஊட்டச்சத்து இல்லாமல் தாய் சேய் பாதிப்பு; பள்ளி பருவத்தில் கல்வி கற்க வேண்டிய அவசியம்,' குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், புள்ளியியலாளர் நடராஜ், காந்தி சேவா மையத் தலைவர் நவ்ஷாத், சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஆசிரியர்கள் தண்டபாணி, சித்தானந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.