sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 உலக வன உயிரின தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

 உலக வன உயிரின தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 உலக வன உயிரின தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 உலக வன உயிரின தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : மார் 05, 2026 05:14 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: மசினகுடி மாயாரில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு, வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முதுமலை, மசினகுடி மாயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மசினகுடி வனச்சரகம், கூடலுார் வட்ட சட்டப்பணி ஆனைக்குழு சார்பில், உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு, வன உயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று, நடந்தது. மசினகுடி வனச்சரகர் ராஜன் தலைமை வகித்தார்.

முகாமில், மூலிகை தாவரங்கள், வனவிலங்கு பாதுகாப்பு, மனித - வன உயிரினம் மோதலை தடுப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்குகளை காப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விளக்கப்பட்டது.

மாணவர்கள் வனப்பகுதிக்குள் அழைத்து சென்று மருத்துவ தாவரங்கள் குறித்தும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். வன ஊழியர்கள், மாயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us