/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முருகன் கோவிலில் பூஜை; திரளான பக்தர்கள் தரிசனம்
/
முருகன் கோவிலில் பூஜை; திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : அக் 12, 2025 10:12 PM

ஊட்டி; அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நடந்த கிருத்திகை பூஜையை ஒட்டி காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.
11:00 மணிக்கு கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணா நந்தாஜி தலைமையில், கோவில் இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர்,சந்தனம், குங்குமம் உள்ளிட்ட, 12 அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் முருக பக்தர்களின் பஜனை , ஆடல் , பாடல் நிகழ்ச்சி நடந்தது.