/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையின் நடுவில் பழுதடைந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
/
சாலையின் நடுவில் பழுதடைந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
சாலையின் நடுவில் பழுதடைந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
சாலையின் நடுவில் பழுதடைந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 12, 2025 10:11 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில், சாலையின் நடுவில் பழுதடைந்து நின்ற லாரியால் இரு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரளா மாநிலத்தில் இருந்து, சிமென்ட் செங்கற்கள் லோடு ஏற்றிய லாரி ஒன்று, நேற்று முன்தினம் மாலை குந்தலாடி வழியாக வந்து, உப்பட்டி அருகே சாலையின் நடுவே பழுதடைந்து நின்றது. இதனால், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலையில், ஆட்டோ, பைக் போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே சென்றன.
இதனால், கோவை, கூடலுார், பாட்டவயல், அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் அரசு பஸ்கள் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், தேயிலை மற்றும் நேந்திரன் வாழை ஏற்றிய லாரிகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், ''பழுதடைந்த லாரியை உடனடியாக சரி செய்து, எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.