/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம சபை கூட்டம்: மாசடைந்த குடிநீருடன் வந்த மக்கள்
/
கிராம சபை கூட்டம்: மாசடைந்த குடிநீருடன் வந்த மக்கள்
கிராம சபை கூட்டம்: மாசடைந்த குடிநீருடன் வந்த மக்கள்
கிராம சபை கூட்டம்: மாசடைந்த குடிநீருடன் வந்த மக்கள்
ADDED : அக் 12, 2025 10:10 PM

குன்னுார்; குன்னுார் உபதலை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஊராட்சி செயலர் சுரேஷ் பேசினார்.
அப்போது, கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் பேசுகையில்,''கட்டட அனுமதிக்கு செயல்படுத்தப்படும் ஒற்றை சாளர போர்ட்டலில், 2.34 சென்ட் அளவிற்கு குறைவாக உள்ள இடங்களில் வீடுகளை கட்ட விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளதால், ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நடைமுறைக்கு வராததால் மாவட்ட கலெக்டர் தீர்வு காண வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, பழ தோட்டம் கிராம மக்கள் கழிவு நீர் கலந்த சுகாதாரமற்ற குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து காண்பித்து தீர்வு காண வலியுறுத்தினர்.
அப்போது, மாணவர்கள் அளித்த மனுவில்,'உபதலை அரசு உயர்நிலைப்பள்ளி மைதானம் வாகனங்கள் செல்வதால், மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், மாணவியர் விளையாட முடியாமல், வழுக்கி விழுவதால் அதனை சீரமைத்து தர வேண்டும்,' என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''ஒரு கிராமத்திற்காக மட்டும் கட்டட முறைகளை மாற்ற முடியாது. மக்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பரிந்துரைக்கப் படும்,'' என்றார். தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை உட்பட அரசு துறைகளில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. குன்னுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் ஜவகர் உட்பட பலர் பங்கேற்ற னர்.