/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாட்டர் ஏ.டி.எம்., மீது நம்பிக்கை இல்லை; அருகில் கூட செல்லாத சுற்றுலா பயணிகள்
/
வாட்டர் ஏ.டி.எம்., மீது நம்பிக்கை இல்லை; அருகில் கூட செல்லாத சுற்றுலா பயணிகள்
வாட்டர் ஏ.டி.எம்., மீது நம்பிக்கை இல்லை; அருகில் கூட செல்லாத சுற்றுலா பயணிகள்
வாட்டர் ஏ.டி.எம்., மீது நம்பிக்கை இல்லை; அருகில் கூட செல்லாத சுற்றுலா பயணிகள்
ADDED : அக் 12, 2025 10:10 PM

ஊட்டி; ஊட்டியில் உள்ள பெரும்பாலான வாட்டர் ஏ.டி.எம்.,கள் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சுற்றுலா நகரமான ஊட்டியில், ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், சுற்றுலா வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தண்ணீர் பாட்டில்கள் இருக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
இதற்கு மாற்றாக, சுற்றுலா பயணிகள் பயன்பெரும் வகையில், ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப, சுற்றுலா பயணிகள் 'காயின்' போட்டு தண்ணீர் பிடித்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
சமீப காலமாக, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாட்டர் ஏ.டி.எம்.,களை முறையாக பராமரிக்காமல் போனதால், அதில் உள்ள தண்ணீரின் துாய்மை குறித்து, சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களில் உள்ள தண்ணீர் துாய்மையாக இல்லாததால், யாரும் இதன் அருகே கூட போவதில்லை.
இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் அருகே உள்ள வாட்டர் ஏ.டி.எம்., வீணாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும், 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய 'வாட்டர் டாக்டர்' மற்றும் கேனில் தண்ணீர் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் சுற்றுலா பயணிகளுக்கு போதுமானதாக இல்லை.
மேலும், பயணிகளுக்கு குடிநீர் வேண்டுமெனில் அவர்கள் கடைகளில். 5 லிட்டர் தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பல சுற்றுலா பயணிகள் துாய்மையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
சுற்றுலா பயணி ராஜன் கூறுகையில்,'' ஊட்டிக்கு வரும் போது, பர்லியார் தாண்டி விட்டால், குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்.,கள் பல செயல்படாமல் உள்ளது. செயல்படும் ஏ.டி.எம்.,களில் துாய்மையான குடிநீர் வருவதில்லை. கோர்ட் உத்தரவிட்டும், சுற்றுலா பயணிகளுக்கு துாய்மை குடிநீர் கிடைப்பதற்கு மா வட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பல்லாயிரம் பேர் வரும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரு சிறிய கேனில் வைக்கப்பட்ட தண்ணீர் போதுமானதாக இல்லை.
எனவே, பயணிகள் தேவையான தண்ணீரை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என் றார்.