sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் 'யதி' பூஜை ஊர் நன்மைக்காக தாம்பூல பிரசன்னம்

/

 பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் 'யதி' பூஜை ஊர் நன்மைக்காக தாம்பூல பிரசன்னம்

 பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் 'யதி' பூஜை ஊர் நன்மைக்காக தாம்பூல பிரசன்னம்

 பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் 'யதி' பூஜை ஊர் நன்மைக்காக தாம்பூல பிரசன்னம்


ADDED : டிச 26, 2025 06:53 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே, பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில், யதி பூஜை நடத்தப்பட்டது.

பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில், கோவில் வளர்ச்சி மற்றும் ஊர் நன்மைக்காக தாம்பூல பிரசன்னம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து பிரசன்னா பரிகாரங்களில் ஒன்றான, 'யதிசாப' நிவர்த்திக்காக, 'யதி பூஜை நடத்தப்பட்டது. கோவில் புனரமைப்பு கமிட்டி நிர்வாகி சுதீஷ் வரவேற்றார்.

தலைவர் வினோத் தலைமை வகித்தார். சிறப்பு பூஜைகளை மேல் சாந்தி சுதீஷ், தந்திரி தணேஷ் ஆகியோர் செய்தனர்.

பூஜையில் பங்கேற்க வந்த பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீமத் சுவாமிஆத்மதாஸ் யமிக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. செண்டை மேளத்துடன், அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து, சுவாமிக்கு பாத பூஜை செய்து, வஸ்திர தானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஸ்ரீமத் சுவாமிஆத்மதாஸ் யமி பேசுகையில், ''கோவில் மற்றும் வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் துறவறம் பூண்டவர்களை பார்த்தால், அவர்கள் கோபப்படும் வகையில், நடந்து கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு காலத்தில் பக்தர்கள் அல்லது கோவில் நிர்வாகத்தால், யாரோ ஒரு துறவறம் பூண்ட சுவாமி கோபப்பட்டதால் குறைகள் ஏற்பட்டு இருக்கும். தற்போது சாப நிவர்த்தி பெற்றதன் மூலம் நன்மை கிடைக்கும். எனவே, பிறரை கோபப்பட வைக்காமல், வாழ நாம் பழக வேண்டும்,'' என்றார்.

கூடலுார் கிரிவலம் சிவன் கோவில் நிர்வாகி, ஆன்மிக பெரியவர் நடராஜ் பேசுகையில், ''விஷ்ணு பகவானை நாடி தினம்தோறும் துதித்தால், பாவங்கள் தீரும். ஆனால் அந்த பகவான் ஆலயத்தில் சில ஏற்க முடியாத சம்பவம் நடந்துள்ளது.

இதுபோன்ற நிலை மாற, தினமும் பகவானை தொழுவதுடன், நாம ஸ்லோகங்களை பாடினால், பாவமும் தீரும், உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும்,'' என்றார். தொடர்ந்து, உண்டியல் சமர்ப்பணம், தீபாராதனை, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சியில், சிற்பி முனைவர் ஹரிதாசன், உலக அமைப்பு கமிட்டி நிர்வாகிகள் புஷ்கரன், உன்னிகிருஷ்ணன், கோபிநாதன், கோபாலகிருஷ்ணன், கோவில் மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவில் மேலாளர் சந்தியா கோபி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us