/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மையம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு செயல் விளக்கம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு செயல் விளக்கம்

ADDED : டிச 26, 2025 06:54 AM

கூடலுார்: கூடலுாரில், மனித- விலங்கு மோதலை தடுக்க, 6 கோடி ரூபாயில் அமைந்துள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து, மக்கள் பிரதிநிதிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூடலுார் வனக்கோட்டத்தில், மனித- விலங்கு மோதல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் மூலம், வன விலங்குகளை கண்காணித்து ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 6 கோடி ரூபாய் செலவில் நாடுகாணி ஜீன் பூல் தாவர மையத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மையத்தைக் கடந்த, 20ம் தேதி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தலைமையில் நடந்த விழாவில், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா மையத்தை திறந்து துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, கூடலுார் பகுதியில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை, நாடுகாணி, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு வனத்துறையினர் அளித்து வந்து அதன் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், நடந்த நிகழ்ச்சியில், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ், வனச்சகர் வீரமணி, ஆகியோர்,' இந்த மையத்தில் இருந்து யானைகள், ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் மேற்கொண்டு வரும் பணிகள்,' குறித்து விளக்கினார். வனத்துறையினர் கூறுகையில், 'கட்டளை மற்றும் கட்டுப்பாடு மைய செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்களுக்கு, செயல் விளக்க பயிற்சி வழங்கப்படும்,' என்றனர்.