/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பார்வையாளர்களை வசீகரிக்கும் மஞ்சள் நிற கொன்றை மலர்கள்
/
பார்வையாளர்களை வசீகரிக்கும் மஞ்சள் நிற கொன்றை மலர்கள்
பார்வையாளர்களை வசீகரிக்கும் மஞ்சள் நிற கொன்றை மலர்கள்
பார்வையாளர்களை வசீகரிக்கும் மஞ்சள் நிற கொன்றை மலர்கள்
ADDED : பிப் 22, 2024 06:19 AM

பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பகுதி சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், கொன்றை மலர்கள் முன்னதாகவே பூத்து குலுங்குகிறது.
பொதுவாக ஏப்., மாதம் பூக்க துவக்கி, ஆக., மாதம் வரை இதன் சீசன் இருக்கும். கேரளாவின் மாநில மலரான கொன்றை மலர், சித்திரை மாதத்தில் வரும் விஷூ பண்டிகையின் போது பூஜையில் முக்கிய இடம் பிடிக்கும்.
மேலும் மருத்துவ துறையில் முக்கிய இடம் பிடித்த இந்த மலர்கள், இந்திய ஆயுர்வேதத்தில் 'ராஜ மரம், தங்கமலை மரம் மற்றும் அரக்கு வதா' என்ற பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. நடப்பாண்டு சற்று முன்னதாகவே, பிப்., மாத முதல் வாரத்திலேயே, பூக்க துவங்கியதால் உள்ளூர் மக்களும்; பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.