/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓவியத்தில் சாதிக்கும் இளம் வயது மாணவர்கள்
/
ஓவியத்தில் சாதிக்கும் இளம் வயது மாணவர்கள்
ADDED : ஏப் 18, 2025 11:57 PM

பந்தலுார்: பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகளில், ஆரம்ப பள்ளி மாணவர்கள் மத்தியில், வாசித்தல் மற்றும் ஓவியம் வரைய பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு பள்ளியிலும், பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களும், ஓவியங்களில் தங்கள் திறமையை வெளிக்காட்டி, கண்காட்சி நடத்தினர்.
அதில், மேங்கோரேஞ்ச் பள்ளியில் நடந்த கண்காட்சியை பி.டி.ஏ., தலைவர் சவுக்கத் அலி, மேலாண்மை குழு தலைவர் வைஷாலி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தங்கள் குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பெற்றோர்கள், ஆர்வத்துடன் பார்வையிட்டனர். தலைமையாசிரியர் செல்வி தலைமையில், சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திட்ட பயிற்சி ஆசிரியர் கீதா லட்சுமி மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் அந்தோணியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.