/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
7ம் வகுப்பு மாணவி பலாத்காரம் ஆசிரியர் உட்பட இருவர் கைது
/
7ம் வகுப்பு மாணவி பலாத்காரம் ஆசிரியர் உட்பட இருவர் கைது
7ம் வகுப்பு மாணவி பலாத்காரம் ஆசிரியர் உட்பட இருவர் கைது
7ம் வகுப்பு மாணவி பலாத்காரம் ஆசிரியர் உட்பட இருவர் கைது
ADDED : ஏப் 04, 2024 10:37 PM
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிமணி, 22. இவர், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும், 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியரான ஹெரால்டு சகாயராஜ், 52, என்பவரிடம் முறையிட்டார். இதையடுத்து, விசாரிப்பது போல் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஹெரால்டு சகாயராஜ், அவரை பலமுறை பலாத்காரம் செய்தார்.
இதனால், சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். சைல்டு லைனில் பெற்றோர் புகார் அளித்தனர். குழந்தைகள் நல அலுவலர்கள், ஜெயங்கொண்டம் மகளிர் போலீசில் அளித்த புகாரில், போக்சோ வழக்கில் அபிமணி, ஹெரால்டு சகாயராஜ் கைது செய்யப்பட்டனர்.