/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பள்ளி சீருடை தைக்கும் பெண் தையலர்கள் பெரம்பலுார் கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
/
பள்ளி சீருடை தைக்கும் பெண் தையலர்கள் பெரம்பலுார் கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
பள்ளி சீருடை தைக்கும் பெண் தையலர்கள் பெரம்பலுார் கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
பள்ளி சீருடை தைக்கும் பெண் தையலர்கள் பெரம்பலுார் கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
ADDED : ஜூலை 23, 2024 08:38 PM

பெரம்பலுார்:-- பள்ளி சீருடை தைக்கும் பெண் தையலர்கள் பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்திற்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தைத்து தரும் பணியை மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர், கடந்த 2004ம் ஆண்டு முதல் பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் மையத்தில் இருந்து தைத்து வருகின்றனர். இந்நிலையில், அரியலுார் மாவட்டத்திற்கு என்று தனியாக மகளிர் தையில் கூட்டுறவு சங்கம் அமைக்க கடந்த 10ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தையல் கூட்டுறவு சங்கம் பிரிப்பதை கண்டித்து பலமுறை கலெக்ரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், பள்ளி சீருடை தைக்கும் பெண் தையலர்கள் பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், கலெக்டர் கிரேஸ்பச்சாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அந்த மனுவில் தெரிவித்ததாவது:
மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் அரியலுார் மாவட்டத்திற்கு என்று சங்கம் பிரிந்து சென்றால் இங்கு கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மற்றும் பெரம்பலுார் மாவட்டத்தில் தான் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், தையல் தைக்கும் துணியின் எண்ணிக்கை குறைவாகவும் ஏற்படும். ஆகவே, பிரிந்து சென்றாலும் அரியலுார் மாவட்டத்திற்கு தையல் துணியை பெரம்பலுார் மாவட்ட உறுப்பினர்கள் தைத்து தருவதற்கு அனுமதியாவது தரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். திடீரென நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.