/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 'ஆயுள்'
/
பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 'ஆயுள்'
ADDED : செப் 10, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 55. விவசாயியான இவர், பெரம்பலுாரைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய, 22 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதுகுறித்து, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் பெண்ணின் தாய் கொடுத்த புகாரில், வழக்கு பதிந்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு பெரம்பலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மாணிக்கத்திற்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.
பின், மாணிக்கத்தை போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.