/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது தாத்தா புகாரால் மேலும் ஒரு வழக்கு பதிவு
/
தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது தாத்தா புகாரால் மேலும் ஒரு வழக்கு பதிவு
தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது தாத்தா புகாரால் மேலும் ஒரு வழக்கு பதிவு
தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது தாத்தா புகாரால் மேலும் ஒரு வழக்கு பதிவு
ADDED : ஏப் 27, 2024 01:38 AM

ஆத்துார்:பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளத்தை சேர்ந்தவர் குழந்தைவேல், 68. இவருக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, சேகோ ஆலை, பெரம்பலுார், கிருஷ்ணாபுரத்தில் அரிசி ஆலை, விவசாய தோட்டங்கள் உள்ளன.
இவரது மகன் சக்திவேல், 34. பி.இ., பட்டதாரியான இவர், சேலம் மாவட்டம் ஆத்துாரில் வசிக்கிறார்.
கொலை மிரட்டல்
சொத்தை பிரித்து தரும்படி தந்தையிடம், 2022 முதல் சக்திவேல் தகராறு செய்து வந்தார். அவர் மறுத்த நிலையில், பிப்., 16ல், கட்டராங்குளத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்ற சக்திவேல், சோபாவில் அமர்ந்திருந்த குழந்தைவேலை கொடூரமாக தாக்கினார்.
படுகாயம் அடைந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். எனினும், ஏப்., 18ல் இறந்தார்.
இந்நிலையில் குழந்தை வேலை, சக்திவேல் தாக்கிய வீடியோ, நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பரவியது. அவரது அரிசி ஆலையில் பணிபுரியும் செல்வராஜ் என்பவர் புகாரின்படி, நேற்று முன்தினம், சக்திவேல் மீது, ஐந்து பிரிவுகளில் கைகளத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர்; சக்திவேலையும் கைது செய்தனர்.
இதற்கிடையே, குழந்தைவேலின் தந்தை அத்தியப்பன், 90, நேற்று, 'என் மகன் குழந்தைவேலை, பேரன் சக்திவேல் தாக்கியதோடு என்னையும் தகாத வார்த்தையில் திட்டி தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்தார்' என, கைக்களத்துார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் கூறியதாவது:
கடந்த, 18ல் குழந்தைவேல் இறந்தபோது அவரது மனைவி ஹேமா, 'என் கணவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. வீட்டில் உள்தாழிட்டு துாங்கிக் கொண்டிருந்தவர் இறந்துவிட்டார். இறப்பில் சந்தேகமில்லை' என தெரிவித்தார்.
எஸ்.ஐ., மாற்றம்
ஆனால் தந்தையை சக்திவேல் தாக்கிய வீடியோ பரவியதால், வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தோம். அவரது தாத்தா புகாரில் மேலும் ஒரு வழக்கு பதிந்துள்ளோம்.
மேலும், வீடியோ வெளியான நிலையில், வழக்குப்பதிவுக்கு தாமதம் செய்த கைக்களத்துார் எஸ்.ஐ., பழனிசாமியை, ஆயுதப்படைக்கு இடம் மாற்றி, பெரம்பலுார் எஸ்.பி., ஷியாமளாதேவி உத்தரவிட்டார்.
இவ்வாறு கூறினர்.

