/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் மருத்துவமனையில் தப்பியோட்டம்
/
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் மருத்துவமனையில் தப்பியோட்டம்
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் மருத்துவமனையில் தப்பியோட்டம்
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் மருத்துவமனையில் தப்பியோட்டம்
ADDED : ஜூலை 03, 2024 02:37 AM

பெரம்பலுார்:பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில், திருமண மண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இதற்கு தடையின்மை சான்று பெற திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜ், 55, பெரம்பலுார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை பரிசீலித்த துணை வட்டாட்சியர் பழனியப்பன், 20,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தடையின்மை சான்று வழங்குவதாக துரைராஜிடம் தெரிவித்தார். லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ், பெரம்பலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம், 20,000 ரூபாயை துரைராஜ் கொடுத்தார்.
அப்போது, அங்கிருந்த கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியிடம், அந்த பணத்தை வாங்கி வைக்குமாறு பழனியப்பன் கூறினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரித்த போது, துணை வட்டாட்சியர் பழனியப்பன் நெஞ்சு வலிப்பதாக கூறினார். பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, வி.ஏ.ஓ., நல்லுசாமியை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியர் பழனியப்பன் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.