/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஓய்வு டி.எஸ்.பி.,யிடம் பணம், போன் திருட்டு
/
ஓய்வு டி.எஸ்.பி.,யிடம் பணம், போன் திருட்டு
ADDED : செப் 08, 2024 12:12 AM
பெரம்பலுார் : திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி கிராமம், அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் தில்லைநாயகம். இவர், டி.எஸ்.பி.,யாக சென்னையில் பணியாற்றி 2015ல் ஓய்வு பெற்று சொந்த ஊரில் வசிக்கிறார்.
சென்னையில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்தில் பங்கேற்க, திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு, அரசு பஸ்சில் பயணித்த அவர், பெரம்பலுார் பஸ் ஸ்டாண்டிற்கு நேற்று இரவு பஸ் வந்த போது, கைப்பையை வைத்துவிட்டு அங்குள்ள கழிப்பறைக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பியபோது, 48,500 ரூபாய் பணம், 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைல், ஏ.டி.எம்., கார்டுடன் இருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தில்லைநாயகம் புகாரின்படி பெரம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.