/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுார் மாவட்டத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு: பொதுமக்கள் அவதி
/
பெரம்பலுார் மாவட்டத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு: பொதுமக்கள் அவதி
பெரம்பலுார் மாவட்டத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு: பொதுமக்கள் அவதி
பெரம்பலுார் மாவட்டத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு: பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 23, 2024 04:27 PM
பெரம்பலுார் :
பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், சிறுவர்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு, இப்போது பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நாவறட்சி, உடல் அசதி போன்ற உபாதைகள், குறைந்தபட்சம் மூன்று நாட்கள் முதல், ஒரு வாரம் வரை உள்ளது.
இது ஒருவித வைரசால் பரவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். வேகமாக பரவும் இந்த மர்மநோயை தடுக்க, மாவட்ட சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலுார் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.