UPDATED : நவ 11, 2026 09:54 PM
ADDED : நவ 11, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
பெரம்பலுார்: மறைமுகமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த, ரவுடிகள் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச் செயல்களில் ரவுடிகள் ஈடுபடுவதாக பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., லலித்குமாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளிகளான ரவுடிகள் 11 பேரை கைது போலீசார் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ரவுடிகள் 85 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், அவர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
