/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
டிராக்டர் மாயமானதாக பொய் புகார் அளித்து காப்பீடு பெற்றவருக்கு '6 ஆண்டு'

ADDED : பிப் 01, 2025 01:59 AM

பெரம்பலுார்:சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா, கோவிந்தராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சடையன், 51. இவர், 2012ல் பெரம்பலுார் மாவட்டம், எசனை கிராமத்தில் தங்கி விவசாய வேலை பார்த்தார். அப்போது, வீட்டில் நிறுத்தி வைத்திருந்த தன் டிராக்டரை காணவில்லை என, பெரம்பலுார் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்தனர்.
எப்.ஐ.ஆர்., நகல் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக பெற்றார். ஆனால், மாயமானதாகக் கூறிய டிராக்டரை போலி பதிவெண் வைத்து சொந்த ஊரிலேயே உழவு வேலைக்கு ஓட்டி வந்தார்.
தகவலறிந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் பெரம்பலுார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சடையன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. சடையனுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி பிரேம்குமார் தீர்ப்பளித்தார்.