/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஆம்னி பஸ் எரிந்து சேதம் தப்பிய அய்யப்ப பக்தர்கள்
/
ஆம்னி பஸ் எரிந்து சேதம் தப்பிய அய்யப்ப பக்தர்கள்
ADDED : டிச 04, 2024 12:57 AM

பெரம்பலுார்:ஆந்திரா, முனிபல்லே குண்டூர் தெனாலி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆந்திராவுக்கு, 'ஸ்ரீகனகதுர்கா' என்ற ஆம்னி பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். பஸ்சை தெனாலியை சேர்ந்த நாகபூஷனம், 48, என்பவர் ஓட்டினார்.
பஸ், பெரம்பலுார் மாவட்டம் தண்ணீர் பகுதியில் உள்ள கரடி முனீஸ்வரர் கோவில் அருகில் நேற்று மதியம் 12:45 மணிக்கு வந்தபோது, சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு அனைவரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். பஸ்சின் பின்புறத்தில் சிலிண்டர் வைத்து மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பஸ் எரிந்தது. தகவலறிந்த, பெரம்பலுார் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, பஸ்சின் மேற்பகுதி முழுதும் எரிந்து கரிக்கட்டையானது.