/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
டிரைவர் வெட்டிக்கொலை தடுக்காத ஏட்டு ‛சஸ்பெண்ட்
/
டிரைவர் வெட்டிக்கொலை தடுக்காத ஏட்டு ‛சஸ்பெண்ட்
ADDED : ஜன 19, 2025 12:47 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், கை.களத்துார் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 30, அதே கிராமத்தைச் சேர்ந்த அருண்குமாரிடம் நெல் அறுவடை இயந்திர டிரைவராக வேலை பார்த்தார்.
இவருடன், கை.களத்துார் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், 32, வேலை பார்த்தார். இருவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.
போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரில், நேற்று முன்தினம் சமாதான பேச்சுக்கு இருவரையும் வருமாறு கை.களத்துார் போலீஸ் ஏட்டு ஸ்ரீதர் அழைத்தார். ஏட்டு ஸ்ரீதர், தன் டூ - வீலரில் தேவேந்திரனை பேச்சுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, ஏற்கனவே காத்திருந்த மணிகண்டனை, போலீஸ் ஏட்டு ஸ்ரீதர் முன்னிலையில், தேவேந்திரன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். தேவேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலையாளி தேவேந்திரனுக்கு ஆதரவாக, ஏட்டு ஸ்ரீதர் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி, மணிகண்டனின் உறவினர்கள், சடலத்துடன் ஸ்டேஷனை நொறுக்கினர்.
திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் பரிந்துரைப்படி, எஸ்.பி., ஆதர்ஷ் பசேரா, கை.களத்துார் போலீஸ் ஏட்டு ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் நான்கு எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்கு பணியாற்றும் ஏட்டு, போலீஸ் உள்ளிட்ட அனைவரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.