தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு பட்டாசு பாக்ஸ் பரிசு

ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு பட்டாசு பாக்ஸ் பரிசு

ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு பட்டாசு பாக்ஸ் பரிசு


UPDATED : நவ 04, 2026 06:52 PM

ADDED : நவ 04, 2026 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 06:52 PM ADDED : நவ 04, 2026 02:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: ஹெல்மெட் அணிந்து டூ - வீலர் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு, பெரம்பலுார் போக்குவரத்து போலீசார் பட்டாசு பாக்ஸ் வழங்கினர்.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, பெரம்பலுார் மாவட்ட போக்குவரத்து பிரிவு போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டுவதை பொதுமக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதனால், தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு பாக்ஸ்களை வழங்கி, நுாதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., லலித்குமார், பெரம்பலுார் மாவட்ட போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதன்படி, நேற்று காலை பெரம்பலுார் நகரில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, சிக்னல் பகுதியில் எஸ்.ஐ., சந்திரபோஸ் தலைமையில் போக்குவரத்து போலீசார், ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு பாக்ஸ்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதை மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த டூவீலர் ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து போலீசாரின் இந்த நுாதன பிரசாரம், பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us