/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பஸ்சிலிருந்து விழுந்த பை உரியவரிடம் ஒப்படைப்பு
/
பஸ்சிலிருந்து விழுந்த பை உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : பிப் 14, 2024 01:09 AM

பெரம்பலுார்:புதுக்கோட்டை மாவட்டம், சுல்லனி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன், 48. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் விமானத்தில் சென்னை வந்தார். அங்கிருந்து சொந்த ஊர் செல்ல அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் படிக்கட்டு அருகே டிராவல் பேக்குடன் அமர்ந்திருந்தார். திருச்சிக்கு சென்று பார்த்தபோது டிராவல் பையை காணவில்லை. பெரம்பலுார் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார்.
திருச்சி டவுன் போலீசார், பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஆபீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பெரம்பலுாரில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றும் மருதமுத்து, நேற்று முன்தினம் காலை, அரசு பஸ்சிலிருந்து டிராவல் பை ஒன்று, காரை பிரிவு ரோட்டில் கிடந்ததை எடுத்து, பாடாலுார் போலீசில் ஒப்படைத்தார்.
திருச்சி டவுஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பாடாலுார் போலீசார் தகவல் தெரிவித்து, உரியவரிடம் டிராவல் பையை ஒப்படைத்தனர். முருகையன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

