/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கணவன் தற்கொலை முயற்சி: மனைவி துாக்கிட்டு மரணம்
/
கணவன் தற்கொலை முயற்சி: மனைவி துாக்கிட்டு மரணம்
ADDED : ஏப் 05, 2025 02:50 AM
பெரம்பலுார்:குடும்பத்தகராறில், கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால், மனமுடைந்த மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன், 33. இவரது மனைவி கீர்த்திகா, 27. தம்பதியருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இளவரசன் ஒதியம் பிரிவு ரோடு பகுதியில் தின்பண்டம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
குடிபழக்கம் உள்ள இளவரசன் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் கீர்த்திகாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை இளவரசன் விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் இளவரசனை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவன் விஷம் குடித்ததால், மனமுடைந்த கீர்த்திகா, நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம் போலீசார் விசாரிக்கின்றனர்.

