/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மேல்நிலை தொட்டியில் குரங்கு உடல்; குடிநீர் அப்படியே வினியோகம்
/
மேல்நிலை தொட்டியில் குரங்கு உடல்; குடிநீர் அப்படியே வினியோகம்
மேல்நிலை தொட்டியில் குரங்கு உடல்; குடிநீர் அப்படியே வினியோகம்
மேல்நிலை தொட்டியில் குரங்கு உடல்; குடிநீர் அப்படியே வினியோகம்
ADDED : அக் 12, 2025 11:14 PM

பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே குரங்கு இறந்து கிடந்த தொட்டியில் இருந்து, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்த அவலம் நடந்துள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், அம்மாபாளையம் ஊராட்சி, வன்னிமலையில் வசிக்கும் பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீரில் இரண்டு நாட்களாக துர்நாற்றம் அடிப்பதோடு, புழுக்கள் மிதந்தன.
இதுகுறித்து, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும், ஊராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் தொடர்ந்து அதே குடிநீரை வினியோகம் செய்தது.
இந்நிலையில், நேற்று காலை இளைஞர் ஒருவர், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தபோது, அந்த தொட்டிக்குள் குரங்கு ஒன்று இறந்து அழுகிய நிலையில் இருப்பது தெரிந்தது.
தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தினர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.
பொதுமக்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதா என மருத்துவக்குழுவினர், இக்கிராமத்தில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அதிகாரி இமயவர்மன் கூறுகையில், ''மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி டேங்க் ஆப்ரேட்டர், ஊராட்சி செயலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.