/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஆப்பரேஷன் தியேட்டரில் 13 ஊழியர்கள் மயக்கம்
/
ஆப்பரேஷன் தியேட்டரில் 13 ஊழியர்கள் மயக்கம்
ADDED : அக் 13, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதல் தளத்தில், காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கான ஆப்பரேஷன் தியேட்டர் உள்ளது. இதில், கிருமி தொற்று உள்ளதா என, மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் வழக்கமான ஆய்வில், தொற்று இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, இம்மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களாக உள்ள தனியார் நிறுவன ஊழியர்களான செட்டியம்மாள், 40, சுதா, 30, உட்பட, 13 பேர் தியேட்டரை நேற்று இரவு சுத்தம் செய்ய சென்றனர்.
அப்போது, அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.