ADDED : ஜூலை 19, 2011 12:37 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டமும், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டமும் பெரம்பலூர் வானொலி திடலில் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மருதைராஜ், கர்ணன், கண்ணுசாமி, மாநில துணைதலைவர் முருகுதுரைசாமி, மாவட்ட துணை தலைவர் இளங்கோவன், துணைசெயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்செல்வன், கட்சி பேச்சாளர்கள் ரத்தினவேல், ராசு ஆகியோர் மே தின சிறப்புக்களை எடுத்துக்கூறி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். இதில் முன்னாள் எம்.பி., அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இணைசெயலாளர் ராணி, துணை செயலாளர் கௌரி, அணி செயலாளர்கள் ராஜேஸ்வரி, சாகுல்அமீது, ஸ்டாலின், லெட்சுமி , மாணவரணி நிர்வாகி காமராஜ் உள்பட பலர் பேசினர்.
இதில், மத்திய தொழிற்சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் காட்டுராஜா, திருவேங்கடம், சர்க்கரை பிரிவு நிர்வாகிகள் செல்வமூர்த்தி, செல்வராஜ், அரசுபோக்குவரத்து கழக மத்திய சங்க துணை செயலாளர் துரைராஜ், கிளைச்செயலாளர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக நகர செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ராவணன் நன்றி கூறினார். முன்னதாக பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் சங்கக் கொடியை பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்செல்வன் ஏற்றி வைத்தும் பெயர் பலகையை திறந்து வைத்தும் பேசினார்.