/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெண்ணை அவதுாறாக பேசிய எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்
/
பெண்ணை அவதுாறாக பேசிய எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்
ADDED : ஏப் 18, 2025 01:43 AM
பெரம்பலுார்:புகார் அளிக்க வந்த பெண்ணை அவதுாறாக பேசிய எஸ்.எஸ்.ஐ., பெரம்பலுார் மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அரியலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தவர் சுமதி. கற்பழிப்பு புகார் கொடுப்பதற்காக, ஒரு பெண் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அந்த பெண்ணை அவதுாறாக பேசினார்.
இச்சம்பவம் திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் கவனத்திற்கு வந்தது. எஸ்.எஸ்.ஐ., சுமதி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், சுமதிக்கு, பெரம்பலுார் மாவட்டத்தில் பணி வழங்க டி.ஐ.ஜி., வருண்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆதர்ஷ்பசேரா, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ.,யாக சுமதியை பணியமர்த்தி உத்தரவிட்டார்.
இருப்பினும், மீண்டும் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்ற விருப்பமில்லாததால், மாற்றுப்பணியிடம் வழங்கக்கோரி, டி.ஐ.ஜி., வருண்குமாரை சந்திப்பதற்காக, அவரது அலுவலத்திற்கு சென்று, நேற்று சுமதி காத்திருந்தார்.