/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்
/
ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்
ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்
ஆற்றை கடந்து ஆபத்தை அறியாமல் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்
ADDED : டிச 05, 2024 11:33 PM

பெரம்பலுார் : ஆபத்தை அறியாமல், இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து பள்ளி செல்லும் மாணவ- - மாணவியரின் அவல நிலையைப் போக்க, மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா கூடலுார்- - கூத்துார் கிராமங்களுக்கு இடையே மருதையாறு ஓடுகிறது. இதனால், கூடலுார் பகுதி மக்கள் தங்களது அவசிய தேவைகளுக்கு ஆற்றைக் கடந்தே செல்ல வேண்டும்.
மேலும், நுாற்று-க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் ஒருவரை ஒருவர் கைகோர்த்து பிடித்தபடி, ஆற்றைக் கடந்துதான் கூத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதனால், பலரும் மாற்று உடையுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். தண்ணீர் இல்லாத போது, மக்கள் நடந்தும், டூ--வீலர்களிலும் ஆற்றுப்படுகையைக் கடந்தும் செல்கின்றனர்.
ஆனால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது இலுப்பைக்குடி, பிலிமிசை வழியாக கூத்துாருக்கு, 7 கி.மீ., கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சோகத்தை அதிகரிக்கிறது.