sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

புதுகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ரூ. 72 லட்சம் இலக்கு

/

புதுகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ரூ. 72 லட்சம் இலக்கு

புதுகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ரூ. 72 லட்சம் இலக்கு

புதுகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ரூ. 72 லட்சம் இலக்கு


ADDED : அக் 06, 2011 03:34 AM

Google News

ADDED : அக் 06, 2011 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.72 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் தண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கை:

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்கள் உற்பத்தி செய்யும் கைத்தறி ஆடைகள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் இயங்கிவருகிறது. இவற்றில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக நவீன டிசைன்களில் ஜரிகையுடன் கூடிய பட்டு மற்றும் பருத்தி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் இலவம் பஞ்சு தலையணைகள், மெத்தைகள் தயார் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை வாடிக்கையாளர்கள் , குறிப்பாக பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தஞ்சை கோ-ஆப்டெக்ஸ் மண்டலத்துகுட்பட்ட 19 விற்பனை நிலையங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு விற்பனை இலக்காக ரூ.77 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் மற்றும் அறந்தாங்கி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.72 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரொக்க விற்பனை ரூ.25 லட்சம், கடன் விற்பனை ரூ.47 லட்சம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கினை பூர்த்தி செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கடன் விற்பனைக்கான விண்ணப்ப படிவம் அரசுத்துறை அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us