/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
குடிநீர் கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
/
குடிநீர் கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
ADDED : மே 07, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை நகராட்சியை, கடந்த மாதம் தமிழக அரசு மாநகராட்சியாக தரம் உயர்த்தி உள்ளது.
தற்போது, ஒரு சில பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறையும், ஒரு சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஒரு முறையும் தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்தும், முறையாக குடிநீர் சப்ளை செய்த பின், தண்ணீர் வரி வசூல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

