sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அவைகுறிப்பில் இடம் பெறவில்லை என்பது வேதனை: அப்பாவு

/

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அவைகுறிப்பில் இடம் பெறவில்லை என்பது வேதனை: அப்பாவு

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அவைகுறிப்பில் இடம் பெறவில்லை என்பது வேதனை: அப்பாவு

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அவைகுறிப்பில் இடம் பெறவில்லை என்பது வேதனை: அப்பாவு


ADDED : ஜூலை 09, 2024 07:17 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:ஒரு அரசின் மீது குற்றச்சாட்டு எப்போது சொல்ல வேண்டும் என்றால் ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் சொல்ல வேண்டும். நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு ஒன்றுகூட அவை குறிப்பில் இடம் பெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டமன்றத்தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரும், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எல்லா வழிபாட்டு தலங்களிலும் அவரவர்கள் இஷ்டப்படி செல்கிறார்கள். அதுபோன்று பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்று கூறி உலக அளவில் செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் தான் நடைபெற்றது. இந்தியாவில் 14வது தொழில்துறையில் இருந்த மாநிலம் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் எந்த மாநிலத்தில் தொழில் முதலீடு செய்யலாம் என்று சொன்னால் அதற்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று கூறி அதிகப்படியானோர் வந்து கொண்டு உள்ளனர். இதற்குப் பிறகு சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்று கூறினால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய மாநிலம் தான் தமிழ்நாடு. தனிப்பட்ட முறையில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டமன்றத்தில் கடந்தாண்டு எவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த ஆண்டு எவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்ற புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கப்பட்டது.

ஒரு அரசின் மீது குற்றச்சாட்டு எப்போது சொல்ல வேண்டும் என்றால் ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் சொல்ல வேண்டும். சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுத்து யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சரியான நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் முன்பு நிறுத்துகிறார்கள். காவல்துறை அவர்களால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர் நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு முடிந்த அளவு கொடுக்க வேண்டும். பல இடங்களில் ஒத்துழைப்பு குறையும் போது வழக்கை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் அமர்ந்து பேச வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் என்று கூறுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியின் பேச்சு ஒன்று கூட சட்டமன்றத்தில் பதிவாகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்றம் என்றால் அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி பேரவை விதிப்படி இதுதான் சட்டமன்றம் கூடும். காலையில் கேள்வி நேரம் கேள்வி நேரத்திற்கு முன்பாகவே வெளியே செல்ல வேண்டும் என்று தகராறு செய்தால் நாம் என்ன செய்ய முடியும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். நடக்கும் குற்ற சம்பவங்களை காவல்துறையினரிடம் ஊடகத்துறையினர் கொண்டு சென்று சேர்த்தால் சரியாக நடக்கும். நான்காவது தூண் சரியாக இருந்தால் நாடே சரியாக இருக்கும். அதற்காக நான் நீங்கள் சரியாக இல்லை என்று கூறவில்லை என்றார்.






      Dinamalar
      Follow us