/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
சாவு வீட்டில் சிறுமியரிடம் அத்துமீறியவர் கைது
/
சாவு வீட்டில் சிறுமியரிடம் அத்துமீறியவர் கைது
ADDED : ஆக 20, 2024 04:36 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வேலுாரை சேர்ந்தவர் விவசாயி, சந்திரமோகன். இவரது மனைவி மதிசெல்விராணி, 32, என்பவரின் மாமனார், ஜூலை 28- அன்று உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். 16-ம் நாள் காரியத்திற்காக, நேற்று முன்தினம் மாலையில், அவரது உறவினர்கள் வேலுாரில் உள்ள மதிசெல்விராணி வீட்டிற்கு வந்து இருந்தனர்.
அவரது உறவினரின் நண்பரான, அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், 48, என்பவரும் அங்கு வந்து இருந்தார். மாடியில் தனியே அந்த நபர் இருந்தபோது, வீட்டிற்கு வந்திருந்த, 10 வயதுடைய இரு சிறுமியர், மாடியில் இருந்து அழுது கொண்டே கீழே இறங்கி வந்தனர்.
அவர்களிடம் மதிசெல்விராணி விசாரித்தபோது, செல்வராஜ், சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறினர். சிறுமியரின் பெற்றோர் புகாரின்படி, இலுப்பூர் மகளிர் போலீசார், செல்வராஜை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

