/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
/
மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
ADDED : மே 07, 2024 10:16 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லலாங்குடி, முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல ஏப்., 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.
தினமும் மண்டகபடிதாரர்கள் 15 நாள் திருவிழாவாக, ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 15ம் நாள் திருவிழாவான நேற்று முன் தினம் காலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
பின், மாலை 5.00 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் நான்கு ரத வீதிகளில் வாணவேடிக்கையுடன், வடம் பிடித்து தேர் இழுத்து வந்தனர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து, முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர்.

