/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
காலி குடங்களுடன் காத்திருக்கும் மக்கள்
/
காலி குடங்களுடன் காத்திருக்கும் மக்கள்
ADDED : மே 04, 2024 01:40 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சீனமங்கலம் கிராமத்தில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக குடி தண்ணீர் முறையாக கிடைக்கவில்லை என்றும் ஒரு வாரம் இடைவெளியில் தண்ணீர் கிடைப்பதே அரிதாக இருப்பதாகவும் அப்படியே ஒரு நாள் இடைவெளியில் தண்ணீர் வந்தாலும் பத்து நிமிடம் 20 நிமிடம் மட்டுமே தண்ணீர் விடுவதாகவும் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியாக செயல்படாமல் இருக்கும் குடிநீர் ஆபரேட்டரை பணி மாற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக பி.டி.ஓ.,விடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் கிராம மக்கள் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.