/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பெண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடிப்பூர தேர் திருவிழா
/
பெண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடிப்பூர தேர் திருவிழா
ADDED : ஆக 06, 2024 10:41 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீஅரங்குளநாதர் கோவிவில், ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், இக்கோவிலில் வழிபாடு முறை சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது.
இக்கோவிலில், ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் திருவிழாவில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முறைப்படி, அவர்கள் சாமிஆடி வந்து, பூஜைகளில் கலந்து கொண்டு, தேரை முதலில் வடம் பிடித்து இழுப்பது ஐதீகம்.
இதே போல இந்த ஆண்டு ஆடிப்பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற கோவில் என்றாலும் ஆடிப்பூரத் திருவிழாவான நேற்று காலை 10.00 மணியளவில் பொதுமக்கள் சாமி ஆடி ஊர்வலமாக தேர் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் நடத்திய சிறப்பு வழிபாட்டுக்கு பின் பெரியநாயகி அம்மன் தேரில் எழுந்தருளினார்.
பின், நுாற்றுக்கணக்கான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, தேர் நான்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது.
விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆடிப்பூர தேரோட்டத்தில், பெண்கள் மட்டுமே பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.