/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஜல்லிக்கட்டு போட்டியில் 30 பேர் காயம்
/
ஜல்லிக்கட்டு போட்டியில் 30 பேர் காயம்
ADDED : மார் 20, 2025 02:52 AM
புதுக்கோட்டை:இலுப்பூர் அருகே ஆதனப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 30 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஆதனப்பட்டியில் ஆதனகருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி, தஞ்சாவூர், மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் கலந்து கலந்து கொண்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
வாடி வாசலில் இருந்து, அவிழ்த்து விடப்படும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இந்தப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் கட்டில், பீரோ, வெள்ளிக்காசு, ரொக்கபணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில், காளை உரிமையாளர்கள், வீரர்கள், பார்வையாளர்கள் என 30 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கேயே முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக, இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.