/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
320 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல்
/
320 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல்
ADDED : ஜன 11, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடல்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 320 கிலோ கஞ்சாவை, க்யூ பிரிவு போலீசார் நேற்று கோட்டைப்பட்டினம் பகுதியில் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்காலைச் சேர்ந்த சிலம்பரசன், 36, பிரகாஷ், 40, ஆகியோரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.