/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி
/
சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி
ADDED : டிச 12, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை, டிச. 12-
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொடிவயல் பகுதியை சேர்ந்த நாராயணன், 35, இவரது மனைவி முத்தமிழரசி, 30, இந்த தம்பதிக்கு ஆதீஸ்வரன், 7, இனியவள், 5, ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். நாராயணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், முத்தமிழரசி தன் இரண்டு குழந்தைகளுடன் நேற்று அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், இனியவள் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.