/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுகையில் மீண்டும் துணிகரம் வீடு புகுந்து 89 சவரன் திருட்டு
/
புதுகையில் மீண்டும் துணிகரம் வீடு புகுந்து 89 சவரன் திருட்டு
புதுகையில் மீண்டும் துணிகரம் வீடு புகுந்து 89 சவரன் திருட்டு
புதுகையில் மீண்டும் துணிகரம் வீடு புகுந்து 89 சவரன் திருட்டு
ADDED : ஆக 06, 2025 12:33 AM
அன்னச்சத்திரம்:புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து, 89 சவரன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே அன்னச்சத்திரம் ஜே.என்., நகரை சேர்ந்தவர் கார்த்திகா, 29. இவரது கணவர் கதிரேசன், 32; சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். கார்த்திகா நேற்று முன்தினம் வீட்டை பூட்டி பெங்களுருவில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று, கார்த்திகா வீடு திரும்பிய போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 89 சவரன் நகைகள், 170 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது புகாரில், புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை எஸ்.பி., அபிஷேக்குப்தா நேரில் விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் புதுக்கோட்டை பாசில் நகரில் விவசாயி வீட்டில், 160 சவரன் நகைகள் திருடப்பட்ட நிலையில், நேற்றும் நடந்துள்ள திருட்டு, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.